Posts

Showing posts from September, 2020

மாடுகளை வெட்டத் தடை விதிப்பது தொடர்பான பிரேரணை பிற்போடப்பட்டுள்ளது: கெஹெலிய ரம்புக்வெல

Image
  மாடுகளை வெட்டுவதைத் தடை செய்வது தொடர்பான பிரேரணை தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இன்று தெரிவித்தார். மாடுகளை வெட்டுவதைத் தடை செய்வது தொடர்பான பிரேரணை ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அனைத்துப் பிரிவினரிடம் இருந்தும் தேவையான கருத்துக்கள் பெறப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று

Image
  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,152 ஆக அதிகரித்துள்ளது. மாலைத்தீவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 194 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓரிரவு பெய்த மழையால் வௌ்ளத்தில் மூழ்கியது கொழும்பு

Image
இன்று காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் கொழும்பில் 150 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவானது. கொழும்பு கோட்டை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் 141 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவானது.வெ ள்ள ம்பிட்டி – வென்னவத்த, மூன்றாம் ஒழுங்கையில் அமைந்துள் சில வீடுகள் இன்று காலை வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. அங்கொட, கொதடுவ, தெமட்டகொடை ஆகிய பகுதிகளும் வௌ்ள நீரால் மூழ்கியிருந்தன.கொழும்பு பல்கலைக்கழக வளாகமும் கொழும்பு BRC மைதானமும் நீரில் மூழ்கியுள்ளதுடன், கொழும்பு தாமரைத் தடாகத்தின் வாகனத் தரிப்பிடத்திலும், அதனை சூழவுள்ள வீதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையாலும் வெள்ளநீர் தேங்கியதாலும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. கிராண்ட்பாஸ், ஆமர் வீதி உட்பட கொழும்புக்குள் பிரவேசிக்கும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் இன்று காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மழையால் கொழும்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 5,507 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திம்பிரிகஸ்யாய, கொலன்னாவ, ஜயவர்தனபுர, மொரட்டுவை, கொழும்பு, கடுவலை சீதவாக்க, மஹரகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். ஜய